யாழில் ஹெரோயினுடன் இளைஞன் கைது
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் நேற்று சனிக்கிழமை 2 கிராம் 150 ஹெரோயினுடன், இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்இ யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
தற்போது அவரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.