யாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களுக்கு தீ வைப்பு!
யாழ்ப்பாணம் இணுவில் வீதிஇ மானிப்பாய் வசிக்கும் சந்திரபாலி அஹெனியா என்பவரது இல்லத்தில் நிறுத்தப்பட்டிருந்த, மோட்டார் சைக்கிள் தீயிட்டு எரிக்கப்பட்டு, மகேந்திரா வானின் கண்ணாடிகள் தாக்கப்பட்ட நிலையில் சேதமடைந்தன.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 11.00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக உடுவில் ஏ.பி.சி வீதியை சேர்ந்த ஒருவரால் இந்த தாக்குதல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்