யாழில் இருந்து கதிர்காம பாதயாத்திரியர்கள் வெருகலை நோக்கி பயணம்

-மூதூர் நிருபர்-
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்துக்குச் செல்லவுள்ள கதிர்காம பாத யாத்திரியர்கள் மூதூர்-கிளிவெட்டி சித்திவிநாயகர் ஆலயத்தை வந்தடைந்து அங்கிருந்து இன்று புதன்கிழமை காலை வெருகலை நோக்கி பயணிக்கின்றனர்.
மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமான இப் பாத யாத்திரையானது ஜுலை 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள கதிர்காம கொடியேற்றத்தின்போது கதிர்காமத்தை சென்றடையவுள்ளனர்.
யாழ்ப்பாணம் -செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமத்திற்கு செல்லும் குழுவில் ஆண்கள்,பெண்கள் என 88 பேர் காணப்படுவதோடு இவர்கள் ஒவ்வொரு ஆலயங்களாக தரிசித்து கதிர்காமத்தை சென்றடையவுள்ளதாக பாதயாத்திரை குழுத்தலைவர் ஜெயாவேல் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்