மூதூர் சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் கஞ்சி : இரு பெண்கள் உட்பட மூவர் கைது (வீடியோ இணைப்பு)

மூதூர் நிருபர் -எம்.என்.எம்.புஹாரி-

திருகோணமலை -சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியதாக மூன்று பேரை சம்பூர் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரு பெண்கள் உட்பட தமிழ் தேசிய மக்கள் முண்னனியின் முன்னாள் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஹரிகரகுமார் உள்ளடங்குவதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்