தற்போதைய அரசாங்கத்துடன் ரணில் விக்கிரமசிங்கவும் வீட்டிற்கு செல்ல வேண்டும், என தெரிவித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு முன்னால் இன்று சனிக்கிழமை காலை போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இலங்கையில் அதிகமுறை பிரதமராக பதவி வகித்திருந்த ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்படுவது அவரது அரசியல் வாழ்க்கையில் இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.