முகம் பளிச்சென்று இருக்க
🟡முகம் பளிச்சென்று இருக்க வேண்டும் என்ற ஆசை ஆண், பெண் இருவருக்கும் இருக்கும். அதற்காக பல அழகு நிலையங்களுக்கு சென்று முகம் பளிச்சென்று இருக்க வேண்டும் என்று, அதிகம் பணம் செலவழிப்பார்கள். என்ன தான் நாம் பல நிலையத்துக்கு சென்று சருமத்தை அழகுபடுத்திக்கொண்டாலும், அங்கு பயன்படுத்தப்படும் கெமிக்கல் சருமத்திற்கு சில சமயங்களில் பலவகையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே சருமத்தின் அழகை அதிகரிக்க நினைப்பவர்கள் செயற்கை முறையை பின்பற்றுவதை இன்றுடன் கைவிடுங்கள். இயற்கை முறையில் நாம் வீட்டிலேயே சரும அழகை அதிகரிக்க இங்கு பலவகையான இயற்கை அழகு குறிப்புகள் உள்ளது. அவற்றை பின்பற்றினாலே என்றும் முகம் பளிச்சென்று இருக்கும். அது என்ன இயற்கைப் பொருட்கள் என்பதைப் பார்ப்போம்.
🎈சருமம் என்றும் இளமையுடன் இருக்க மஞ்சள் ப்ளீச். அதாவது கடைகளில் விற்கப்படும் மஞ்சள் கிழங்கை வாங்கி அதனை அரைத்து சிறிதளவு எடுத்து, அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து பின்பு, சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த முறையினை வாரத்தில் இரண்டு முறை செய்து வர, முகம் பளிச்சென்று இருக்கும்.
🎈சரும அழகை அதிகரிக்க நினைப்பவர்கள், இந்த தக்காளி ப்ளீச் செய்யலாம். அதற்கு தக்காளியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, பின் கழுவினால் முகம் பட்டுப் போன்று மின்னும். இந்த முறையினை தினமும் செய்து வர சருமம் ஆரோக்கியமாக இருக்கும், அதேபோல் என்றும் சருமம் பளிச்சென்று இருக்கும்.
🎈சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த ஆலிவ் ஆயில் ப்ளீச் மிகவும் சிறந்த ஒன்று. எனவே என்றும் முகம் பளிச்சென்று இருக்க ஆலிவ் ஆயிலை ஒரு ஸ்பூன் எடுத்து, அவற்றை சிறிதளவு சர்க்கரையை சேர்த்து சருமத்தில், இந்த கலவையை நன்றாக அப்ளை செய்து, சிறிது நேரம் ஸ்க்ரப் செய்யுங்கள். பின்பு சருமத்தை கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்துவர முகம் பளிச்சென்று இருக்கும்.
🎈சருமத்தின் பொலிவை அதிகரிக்க ஆரஞ்சு பழங்கள் மிகவும் சிறந்தது. குறிப்பாக அவற்றின் தோல்களில் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. எனவே ஆரஞ்சு பழத்தின் தோலை சூரிய வெப்பத்தில் 2 நாட்கள் காய வைத்து, பொடி செய்து, அதோடு மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, பேஸ்ட் போல் செய்து கொண்டு, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை என்று தொடர்ந்து செய்தால், முகம் பளிச்சென்று இருக்க, இந்த ப்ளீச் நல்ல பலன்தரும்.
🎈சருமத்தில் ஏற்படும் தேவையற்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு இந்த வெள்ளரிக்காய் ப்ளீச் மிகவும் பயன்படுகிறது. அதற்கு வெள்ளரிக்காயின் சிறிய துண்டை எடுத்து அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவு சேர்த்து கலந்து பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு மாஸ்க் போன்று போட்டு, ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகம் பொலிவோடு காணப்படும்.
🎈சருமம் பளிச்சென்று இருக்க ஒரு பாத்திரத்தில் வெந்தயம் 1 டீஸ்பூன் மற்றும் கசகசா 1 டீஸ்பூன் போட்டு, தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, பின் அதனை அரைத்து, அத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.
முகம் பளிச்சென்று இருக்க
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்