மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!
புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் கடலலையானது 2.5 முதல் 3 அடி வரை மேலெழக்கூடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மறு அறிவித்தல் வரை குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.