மீசை தாடி சீக்கிரம் வளர

மீசை தாடி சீக்கிரம் வளர

மீசை தாடி சீக்கிரம் வளர

⚫அனைத்து ஆண்களுக்கும் பொதுவாக மீசை மற்றும் தாடி வளர்ப்பது மிகவும் பிடித்த ஒன்று. சில ஆண்களுக்கு மிக எளிதாகவே அதாவது இயற்கையாகவே எளிதில் வளர்ந்து விடும். சில ஆண்களுக்கு அவர்கள் என்ன தான் முயற்சி செய்து பார்த்தாலும் மீசை, தாடி என்பது வளரவே வளராது. ஆண்களுக்கு அழகு சேர்ப்பது மீசை மற்றும் தாடி இரண்டும் தான் அந்தவகையில் மீசை, தாடி வளர்வதற்கு என்னென்ன இலகுவான வழிகள் உள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

⭕உடலுக்கு தேவையான அளவிற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அதிகளவு எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக தினமும் மீன், முட்டை, பால் ஆகியவற்றை தினமும் அதிகளவு உட்கொள்ள வேண்டும்.

⭕ஆமணக்கு எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் இரண்டையும் ஒன்றாக கலந்து இரவு தூங்கும்போது, முகத்தில் தடவி மறுநாள் காலை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் முகத்தில் மீசை மற்றும் தாடி கண்டிப்பாக வளரும்.

⭕ஒரு சில இலவங்கப் பட்டைகளை எடுத்து அரைக்கவும். சிறிது எலுமிச்சை சாறு செய்து, நன்றாக கலந்த கொள்ளவும். இந்த பேஸ்டை உங்கள் தாடி பகுதியில் தடவி 20-25 நிமிடங்கள் அப்படியே  இருக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி,  முகத்தை கழுவவும். அதிகபட்ச இந்த செயல்முறையை வாரத்திற்கு இரண்டு முறையாவது செய்து வர முகத்தில் தாடி வளர ஆரம்பிக்கும்.

⭕இரவு தூங்குவதற்கு முன் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்துக்கொள்ளவும். பின்பு அந்த தண்ணீரை முகத்தில் ஆவிபிடிக்கவும். முகத்தில் ஆவிபிடித்த பிறகு முகத்தை சுத்தமாக துடைத்துவிட்டு, ஆமணக்கு எண்ணெயை மீசை மற்றும் தாடி வளரும் இடத்தில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின்பு இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் கண்டிப்பாக மீசை மற்றும் தாடி வளர ஆரம்பித்து விடும்.

⭕முடி வளர்ச்சியை தூண்டுவதற்கு அதிகளவு விளக்கெண்ணெய் பயனுள்ளதாக இருக்கிறது எனவே தினமும் இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் விளக்கெண்ணெயை தடவி மறுநாள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால்  முகத்தில் மீசை மற்றும் தாடி கண்டிப்பாக வளர ஆரம்பித்து விடும்.

⭕ஒரு பாத்திரத்தில் வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து கொள்ளவும். அவற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு விட்டமின் இ மாத்திரை ஒன்றும் மற்றும் ஆலிவ் ஆயில் ஒரு ஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை இரவு தூங்கும்போது முகத்தில் தடவி மறுநாள் காலை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து 10 நாட்கள் வரை செய்து வந்தால் கண்டிப்பாக முகத்தில் மீசை மற்றும் தாடி வளர்ந்து விடும்.

⭕கருஞ்சீரகம் எண்ணெயும் மிக பயனுள்ளதாக இருக்கிறது. எனவே இரவு தூங்கும் போது, முகத்தில் நீராவி பிடித்துவிட்டு, பின்பு காட்டன் துணியால் முகத்தை சுத்தமாக துடைத்துவிடுங்கள். இந்த கருஞ்சீரகம் எண்ணெயை மீசை மற்றும் தாடி வளரும் இடத்தில் தடவி இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இந்த முறையையும் தினமும் செய்துவந்தால் கண்டிப்பாக மீசை மற்றும் தாடி வளரும்.

மீசை தாடி சீக்கிரம் வளர

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்