மின்னல் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு

-பதுளை நிருபர்-

மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பத்தன்ன பகுதியில் வீடு கட்டுவதற்காக வெட்டி வைக்கப்பட்டிருந்த தளத்தில் மண்வெட்டியுடன் சகோதரனும் சகோதரியும் நின்று கொண்டிருந்த வேளையில் மின்னல் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது குறித்த இருவரும் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, 11 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளதாகவும், 17 வயதுடைய சகோதரன் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறுமியின் சடலம் தற்போது பசறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.