மித்தெனிய போதைப்பொருளுக்கும் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களுக்கும் தொடர்பில்லை – பொலிஸ் பேச்சாளர்
கொழும்பு துறைமுகத்திலிருந்து முன்னதாக விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களுக்கும் தற்போது மித்தெனியவில் ஐஸ் போதைப்பொருளுக்குரிய மூலப்பொருள் அடங்கியிருந்த கொள்கலன்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எவ்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.
விசேட செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் பிரத்தியேகமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த விசாரணை ஆவணங்களில் உள்ள 323 கொள்கலன்களுக்கான இலக்கங்களுடன், குறித்த போதைப்பொருள் கொள்கலன்களின் இலக்கங்கள் பொருந்தவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.