மாளிகாவத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
மாளிகாவத்தை பொலிஸ்நிலையத்துக்கு அருகிலுள்ள முச்சக்கர வண்டி உதிரிபாக விற்பனை நிலையமொன்றில் பணிபுரிந்துவந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரால் ரீ 56 ரக துப்பாக்கியினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
