மாணவிகளுக்கான பாதுகாப்பு அணையாடை தொடர்பில் வெளியான தகவல்
பாடசாலை மாணவிகளுக்கான பாதுகாப்பு அணையாடை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு, தெரிவு செய்யப்பட்ட வர்த்தக நிறுவனங்களினூடாக மாத்திரமே முன்னெடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை தர நிர்ணய நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட SLS தரச் சான்றிதழைப் பெற்ற, 4 வர்த்தக நிறுவனங்களிலிருந்து மட்டுமே இதனைப் பெறமுடியும் என அமைச்சு அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பாடசாலைகளுக்குச் சென்று மாணவிகளுக்குப் பாதுகாப்பு அணையாடைகளை வழங்குமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.