மருந்து பற்றாக்குறையை தீர்ப்பதில் சில சட்ட சிக்கல்கள்
தற்போதைய மருந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் சில சட்டங்களும் விதிமுறைகளும் தடையாக உள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் உள்ள விபாசி பௌத்த நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
சில சட்டங்களும் விதிமுறைகளும் பிரித்தானிய காலனித்துவ காலத்திற்கு முந்தையவை என்றாலும், பெரும்பாலான சட்டங்களும் விதிமுறைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருப்பதால் அவற்றை எளிதில் திருத்த முடியாது என்றும் சுகாதார அமைச்சர் கூறினார்.