மருதாணி சிவக்க என்ன செய்ய வேண்டும்
💥பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் கூட மருதாணி ரொம்பவே பிடித்த ஒரு விஷயமாக இருக்கிறது. இயற்கையாகக் கிடைக்கும் இலையைக் கொண்டு நம் கைகளை அழகுபடுத்தி பார்க்கும் பொழுது நம்மை அறியாமல் நமக்குள் ஒரு புத்துணர்வும், உற்சாகமும் தொற்றிக் கொள்கிறது. அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் மருதாணி நிறையவே நன்மைகளை செய்யக்கூடியது. இந்த மருதாணி வைப்பவர்கள் கைகளில் அதிகப் பணப் புழக்கம் இருக்குமாம். இத்தகைய மகத்துவம் வாய்ந்த மருதாணி ஒரு சிலருடைய கைகளில் வைக்கும் பொழுது கொஞ்சம் கூட சிவக்கவே செய்யாது. அந்தக் கவலை வேண்டாம். மருதாணி சிவக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
📍மருதாணி அரைக்கும் போது அதில் கொட்டை பாக்கை சேர்த்து அரைத்து வந்தால், மருதாணி சிவந்து விடும்.
📍சுப நிகழ்ச்சிகளுக்கு கைகளில் மற்றும் கால்களில் போடும் மருதாணி விரைவில் காய்ந்துவிடுவதால் நாம் நினைக்கும் நிறம் வராது. எனவே கைகளில் சிவப்பான மருதாணி வேண்டும் என்றால் சர்க்கரை மற்றும் எலுமிச்சை கலந்த சாறை மருதாணியின் மீது தடவ வேண்டும். இதனால் விரைவில் காய்ந்துவிடாமல் நீண்ட நேரத்திற்கு உங்களது கைகளில் ஒட்டிக்கொள்வதோடு, நல்ல சிவப்பு நிறத்தையும் நமக்கு வழங்குகிறது.
📍பெண்களின் கைகள் மற்றும் கால்களில் இடும் மருதாணிகளைப் பெரும்பாலான பெண்கள் தண்ணீரைக் கொண்டு கழுவுவார்கள். இவ்வாறு தவிர்ப்பது நல்லது. உங்களது மருதாணி நல்ல சிவப்புடன் இருக்க வேண்டும் என்றால், கடுகு எண்ணெய்யைக் கொண்டு கைகளில் மருதாணியை நீக்ககுவதன் மூலம் மருதாணி அதிக நேரம் கையில் இருப்பதுடன் நல்ல சிவப்பு நிறத்துடன் காட்சியளிக்கும்.
📍மருதாணி கைகளில் இடுவதற்கு முன்னதாக கிராம்பை அந்த பேஸ்டுடன் கலந்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் சுமார் 3-4 கிராம்புகளை நன்றாக தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவிப்பிடிக்கும் போது நல்ல சிவப்பு நிறம் உங்களுக்கு கிடைக்கும்.
📍பெண்கள் கைகளில் மருதாணியை இட்ட பிறகு, உங்கள் கைகளைத் தண்ணீரிலிருந்து விலக்கி வைக்க முயற்சிக்க வேண்டும். குறைந்தப்பட்சம் 5-6 மணி நேரத்திற்கு தண்ணீரைத் தொடக்கூடாது. ஒரு வேளை நீங்கள் செய்ய நேரிட்டால் சில இடங்களில் மருதாணி அழிந்துவிடுவதோடு நிறத்தை மங்கச்செய்யும். எனவே மருதாணி நன்றாக காய்ந்தாலும் கூட நன்றாக தேய்த்து துடைத்தபிறகு சிறிது நேரம் எண்ணெய்யைப் பயன்படுத்த வேண்டும்.
📍மருதாணி நன்றாக சிவக்க வேண்டும் என்றால், மருதாணியுடன் பீட்ருட் பொடியை சேர்த்து மருதாணி வைத்தால் நல்ல பயன் கிடைக்கும்.
📍மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்துஇ மருதாணி இட்ட கைகளை லேசாக சூடுபடுத்துவதன் மூலம் மருதாணியில் அடர்த்தியான நிறம் கிடைக்கச் செய்யும்.
📍காபி தூள் பயன்படுத்துவதன் மூலமும் மருதாணி நல்ல சிவப்பு நிறத்தை ஏற்படுத்தும்.
📍மருதாணி இட்டபின் சர்க்கரைஇ எலுமிச்சை கலந்த தண்ணீரில் கையை நனைப்பதும் நல்ல பலன் கிடைக்க வழிவகுக்கும்.
📍யூகலிப்டஸ் தைலம் சிறிதளவை கையில் தடவி, பின்னர் மருதாணி இட்டுக் கொண்டால் நாம் எதிர்பார்க்கும் சிவந்த நிறம் நிச்சயம் கிடைக்கும்.
மருதாணி சிவக்க என்ன செய்ய வேண்டும்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்