மரக்கறிகளின் இன்றைய நிலவரம்

புறக்கோட்டை பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்று கிழமை நிலவரத்தின் படி,

நுவரெலியா உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 350 ரூபாவுக்கும் மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 200 ரூபாய் முதல் 230 ரூபாய் வரையும் பாகிஸ்தான் உருளைக் கிழங்கு கிலோ ஒன்று 160 ரூபாய் முதல் 175 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பாகிஸ்தான் பெரிய வெங்காயம் கிலோ ஒன்று 450 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையும் இந்திய சிறிய வெங்காயம் கிலோ ஒன்று 200 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையும் யாழ்ப்பாண சிறிய வெங்காயம் கிலோ ஒன்று 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, வெள்ளை பூடு கிலோ ஒன்று 500 ரூபாய் முதல் 540 ரூபாயாக இன்றைய மொத்த சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்