மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் புத்தர் சிலை

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத்தின் பங்களிப்புடன் புதிய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

மாதவனை மயிலத்தமடு பிரதேசம் பாரம்பரியமாக தமிழ் பால் பண்ணையாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அப்பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள சிங்கள குடியேற்றவாசிகளுக்கு ஆதரவாக புதிய புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் புத்தர் சிலை

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்