மன்னாரில் சொக்கோ மாஸ்டர் அசோசியேஷன் உருவாக்கம்
-மன்னார் நிருபர்-
எம்.என்.எம்.எம் .சொக்கோ மாஸ்டர் அசோசியேசன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் நிர்வாக தெரிவு இடம்பெற்று தலைவராக ஜேசு டெலாஸ் சன் குட்டி, செயலாளராக றெஜிஸ் ராஜநாயகம், பொருளாளராக தட்சன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது எதிர் காலத்தில் சிரேஷ்ட வீரர்களுக்கான போட்டிகள் நடத்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சிரேஷ்ட வீரர்களை கொண்ட இரு அணிகளை மாவட்டத்தில் உருவாக்குதல், வெளி மாவட்டங்களுக்குச் சென்று போட்டிகளில் கலந்து கொள்ளுதல் என்பவை குறித்தும் விசேட விதமாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்