மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைமைக் காரியாலய திறப்பு விழா இன்று இடம் பெற்றது.
சிரேஸ்ட ஊடகவியலாளரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமாமிய சாமஸ்ரீ தேசமான்ய உ.உதயகாந்த் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டது
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையமானது கடந்த 12 வருடங்களுக்கு மேலாக மாவட்டத்தின் சமூக மேம்பாடு மற்றும் இன நல்லுறவை ஏற்படுத்தல் போன்ற சமூகம் சார் நல திட்டங்களை அமுல்படுத்தி வரும் நிலையில் மேலும் தமது சேவையினை விரிவுபடுத்தி மக்கள் தம்மிடம் இலகுவாக சேவையினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு மட்டக்களப்பு நகரில் அமையப்பெற்றுள்ள பிரதான பஸ் தரிப்பு நிலையத்தின் மேல் தளத்தில் இன்றைய தினம் பிரதான காரியாலயம் மிகவும் கோலாகலமாக மாவட்ட அரசாங்க அதிபர் மாநகர முதல்வர்களினால் நண்பகல் 12.00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் திரு.சிவம் பாக்கியநாதன் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி மாநகர முதல்வர் திரு.வை.தினேஸ்குமார் விசேட அதிதிகளாக பங்கு பற்றினர்
சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் . ஆலோசகர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் சமைய தலைவர்கள் கலந்து கொண்டனர்
இணைப்பாளர்களுக்கான அடையாள அட்டை மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கி வைத்தார்.சங்கத்தின் கடந்த கால செயற்பாடுகளுக்கு (2025) பூரண ஒத்துழைப்பு வழங்கிய இரண்டு சமாதான நீதிவான்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை
