மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பகல்லூரியில் புதிய பாடநெறி
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பகல்லூரியில் புதிய பாடநெறி நேற்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
வடக்கு கிழக்கிலே தொழில்நுட்ப கல்வி பயிற்சி திணைக்களத்தின் கீழ் ஆரம்பமான முதலாவது பாடநெறி பீசாலங்கா நிறுவனத்தின் இணை அனுசரணையுடன் 70 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களும் வழங்கப்பட்டு குறித்த பாடநெறிக்கான அனைத்து செலவுகளும் ஏற்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கிலே ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பாடநெறியானது கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற தொழில்நுட்ப கல்வி பயிற்சி திணைக்களத்தின் கீழ் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாவது தடவையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடநெறியில் ஒரு வருடத்தில் 120 மாணவர்கள் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்வாங்கப்படுவார்கள்.
மேலும் குறித்த மாணவர்கள் பாடநெறியை பூர்த்தி செய்த பின்னர் வீசாலங்கா நிறுவனம் மற்றும் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்.
தொழில்நுட்ப கல்வியில் பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஈ.ஜெகத் முதலாவது பாடநெறியை மட்டக்களப்பில் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
இதேவேளை நேற்றைய நிகழ்வில் தொழில்நுட்ப கல்வியியல் பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஈ.ஜெகத், முன்னாள் கல்வி பிரதி பணிப்பாளர் நாயகம் பரமேஸ்வரன், முன்னாள் பிரதி பணிப்பாளர் நாயகம் கல்வி நடவடிக்கை லீலாரத்தின, பீசா லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, முகாமைத்துவ பணிப்பாளர், பணிப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் குறித்த பாடநெறியை ஆரம்பிப்பதற்கு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்ப கல்லூரியின் கல்வி சார் கல்வி சாரா உத்தியோகஸ்தர்கள் மற்றும் அதிபர் சோமசூரியம் ஆகியோர் இந்த பாடநெறியை ஆரம்பிப்பதற்கு உறுதுணையாக இருந்தனர்.
Beta feature
Beta feature
Beta feature
Beta feature
Beta feature
Beta feature