மட்டக்களப்பு பிராந்தியத்தில்  புதிதாக நியமிக்கப்பட்ட வைத்தியர்களின் நியமனக்கடிதங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு பிராந்தியத்தில்  புதிதாக நியமிக்கப்பட்ட 12 வைத்தியர்களின் நியமனக்கடிதங்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரனால் வழங்கிவைக்கட்டது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரிகளான வைத்தியர் எஸ். தனுஷியா மற்றும் வைத்தியர் சிறிவித்தியன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது புதிய வைத்தியர்களுக்கான, மாவட்ட சுகாதார சேவை தொடர்பான விரிவான அறிமுக கருத்தரங்கு பணிப்பாளர் மற்றும் பிராந்திய பொறுப்பு வைத்திய அதிகாரிகளினால் நிகழ்த்தப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்