மட்டக்களப்பு நகர் பகுதியில் கத்திக்குத்து!

மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில், கிராம அபிவிருத்தி வங்கிக்கு முன்னால் சற்று முன் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலை 10பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆயித்தியமலை பகுதியை பிறப்பிடமாகவும், வாழைச்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டமுத்துலிங்கம் டிலோஜன் (வயது 33) என்பவரே இதன்போது படுகாயமடைந்துள்ளார்.

குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.