மட்டக்களப்பு-கல்லடி இளைஞன் நடைபயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்!
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த சாந்திக்குமார் முகேஸ்கண்ணா தான் ஆரம்பித்த சாதனைமிகு நடை பயணத்தை நேற்று திங்கட்கிழமை மாலை கல்லடி மணிக்கூட்டுக் கோபுர முன்றலில் நிறைவு செய்தார்.
இவர் தனது நடை பயணத்தை கடந்த 24.08.2024 ஆம் திகதியன்று கல்லடி மணிக்கூட்டுக் கோபுர வளாகத்திலிருந்து ஆரம்பித்து கரையோரமாக சுமார் 1500 கிலோமீட்டர் தூரத்தை 43 நாட்களில் நிறைவு செய்துள்ளார்.
இவரின் வெற்றிப் பயணத்தின் முடிவிடமான கல்லடி மணிக்கூட்டுக் கோபுர வளாகத்தில் முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன்,ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி பொன்னாடை போர்த்தி,மலர்மாலை அணிவித்துக் கௌரவப்படுத்தினர்.