மட்டக்களப்பில் லொறி மற்றும் டிப்பர் வாகனம் மோதி விபத்து
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன பிரதான வீதியில், பேருந்து டிப்போவுக்கு அருகாமையில் இன்று வியாழக்கிழமை லொறி மற்றும் டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
கொழும்பிலிருந்து ஓட்டமாவடி நோக்கி பயணித்த லொறி எதிரே பயணித்த டிப்பருடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் லொறியின் சாரதி காயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டிப்பரை செலுத்திய சாரதி தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.