மட்டக்களப்பில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!

மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் வீதிப்போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.

இந்நிலையில் தம்புள்ளையில் இருந்து மரக்கறிகள் வராத காரணத்தினால் மரக்கறிகளின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 15 ரூபாய் தொடக்கம் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் தற்போது முட்டை முட்டை ஒன்று 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

முட்டை விலை குறைவடைந்திருந்த நிலையில் முட்டை வியாபாரிகள் முட்டைகளை பதுக்கி வைத்துள்ளதால் சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை அதிகரித்துள்ளதாக, மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.