மட்டக்களப்பில் மகனை தலைகீழாக கட்டி வைத்து அடித்த தாய் : தாயும் சகோதரனும் விளக்கமறியலில்!

மட்டக்களப்பில் சிறுவன் ஒருவனை தலைகீழாக கட்டி வைத்து அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் மற்றும் அவரது சகோதரன் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட இருவரையும் ஏறாவூர் பொலிஸார் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் ஜீன் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் துன்புறுத்தலுக்குள்ளாகிய சிறுவன் உட்பட குறித்த பெண்ணின் மூன்று பிள்ளைகளும் மருத்துவ அறிக்கை பெறுவதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி (முழு விபரம்)

மட்டக்களப்பில் சிறுவனை தலைகீழாக கட்டி வைத்து அடித்த தாய் (வீடியோ இணைப்பு )

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்