சுவாமி விபுலாநந்தரின் கற்சிலை திறப்பு விழா தொடர்பாக மட்டக்களப்பில் இடம்பெற்ற விசேட ஊடக மாநாடு

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் கற்சிலை திறப்பு விழா மற்றும் சிறப்பு மலர் நூல் வெளியீடு தொடர்பான விசேட ஊடக மாநாடு இன்று புதன் கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் ஏற்பாட்டில் சுவாமியின் துறவற நூற்றாண்டினை முன்னிட்டு கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில் சுவாமி விபுலாநந்தரின் 15 அடி உயரமான கருங்கல்லினால் ஆன திருவுருவச் சிலையினை எதிர்வரும் 17.05.2025 திகதி   திறந்து வைக்கப்படவுள்ள விடயம் தொடர்பான ஊடக மாநாடு இன்று மட்டக்களப்பு ஈஸ்ற் லகூன் ஹோட்டலில் இடம்பெற்றது.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் கற்சிலை அமைப்புக்குழுவின் தலைவர் தேசபந்து எம் .செல்வராசா ஏற்பாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா சபை தலைவர் கே.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்றது.

ஊடக மாநாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா சபை பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.