மட்டக்களப்பில் எரிபொருளுக்காக மீண்டும் வரிசை!
-மட்டக்களப்பு நிருபர்-
அரசினால் மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலைச் சீர்திருத்தத்திற்கு அமைவாக இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளது.
குறித்த விலைக் குறைப்பினைத் தொடர்ந்து மட்டக்களப்பில் மீண்டும் எரிபொருளுக்கான வரிசை நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்றைய தினமே விலை குறையவுள்ளதை அறிந்து கொண்ட எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சிலர் எரிபொருளை பெற்றுக் கொள்ளாத நிலையிலேயே மீண்டும் எரிபொருளுக்கான வரிசை ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரில் உள்ள ஐ.ஓ.சி (IOC) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மாத்திரம் எரிபொருள் காணப்பட்டதனால் மட்டக்களப்பு நகர்ப் பகுதிக்கு வருகை தரும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
தனக்கு சுமார் 6 இலட்சம் நஸ்டம் ஏற்பட்ட போதிலும் காலை வேளையில் தொழில்களுக்கு செல்லும் பொது மக்களுக்கு தம்மால் எரிபொருள் வழங்க முடிந்ததையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாக, தேசபந்து மா.செல்வராசா எமது செய்திச்சேவைக்குத் தெரிவித்தார்.