மட்டக்களப்பில் இடம்பெற்ற சர்வதேச மார்பக புற்று நோய் விளிப்புணர்வு நடைபவணி
மட்டக்களப்பில் இன்று புதன் கிழமை சர்வதேச மார்பக புற்று நோய் விளிப்புணர்வு நடைபவணி இடம்பெற்றது.
கல்லடி மீன் இசை பூங்காவிலிருந்து காலை 9 மணியளவில் ஆரம்பமான குறித்த நடைபவணி காந்தி பூங்கா வரையில் இடம்பெற்று நிறைவடைந்தது.
இந்நிகழ்வானது இலங்கை புற்றுநோய் சங்கம் மட்டக்களப்பு கிளையின் பிரதானி வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர்கள், தாதிய பயிற்சிமாணவர்கள், பிராந்திய சுகாதார பணிப்பாளர்கள், லயன்ஸ்கிளப் உறுப்பினர்கள், லியோ கிளப் உறுப்பினர்கள் என்போர் கலந்து கொண்ருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்