மகளிர் உலக கிண்ண T20 கிரிக்கெட் : இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்!

மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான போட்டி இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டி இன்று பிற்பகல் 3.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 58 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதன்படி, நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

தொடர்ந்து 161 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய இந்திய அணி 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 102 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.