போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முற்பட்டவர் கைது
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞர் ஒருவர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முற்பட்ட போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்ததுடன்இ சந்தேகநபர் அனுராதபுரத்தில் உள்ள தரகர் ஒருவரிடம் 13 மில்லியன் ரூபா கொடுத்து கனடாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தனது விமான அனுமதியை முடித்துவிட்டு தனது கடவுச்சீட்டை குடிவரவு அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார்.
பாஸ்போர்ட்டில் இருந்த புகைப்படம் குறித்து சந்தேகம் அடைந்த அதிகாரி, கணினியில் தகவல்களை பதிவு செய்தார். பின்னர் அந்த பாஸ்போர்ட் வேறு சிலருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
கடவுச்சீட்டின் உண்மையான உரிமையாளர் திருகோணமலை நீதிமன்றத்தால் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டவர்.
அதன்படி, சந்தேக நபர் குடிவரவு திணைக்களத்தின் எல்லை அமுலாக்கப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரின் பையில் சந்தேக நபரின் உண்மையான கடவுச்சீட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இளைஞனின் சூட்கேஸில் அவரது உண்மையான தேசிய அடையாள அட்டையும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் குடிவரவு அதிகாரிகளிடம் அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தினார், என தெரிவிக்கப்படுகின்றது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்