போர் வீரர்களை ஜனாதிபதி, சிப்பாய்கள் என குறிப்பிட்டமை வருத்தமளிக்கின்றது – நாமல்

போர் வீரர்களை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சிப்பாய்கள் எனக் குறிப்பிட்டமை வருத்தமளிப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள இராணுவ நினைவுச் சின்னத்திற்கு முன்பாக, இன்று செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த இராணுவ நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்றைய நாளினை மிகவும் பெருமையுடன் கொண்டாடுவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், இராணுவ வெற்றித் தினத்தில் பங்கேற்பதில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முதலில் பின்வாங்கினார்.

தமக்கு ஆட்சியமைப்பதற்கு அமைதியானதொரு நாட்டினை உருவாக்க உயிரைவிட்ட இராணுவத்தினரை இந்த அரசாங்கம் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.

எனவே, அவர்களை உதாசீனம் செய்வதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.