பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட பொலிஸாரால் உயிரிழந்த இளைஞனின் உடல்

-யாழ் நிருபர்-

வட்டுக்கோட்டை பொலிஸாரின் கொடூர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்ற இளைஞனின் மரணம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் குறித்த இளைஞனின் சடலமானது பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது

பொலிஸார் 785 வழித்தட வீதியை முற்றாக வீதித்தடை மூலம் மூடி பயணிகளின் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறு விளைவித்தனர். இதனால் பயணிகள் சுற்றுப்பாதையை பயன்படுத்தி மிகவும் கடினத்தின் மத்தியில் பயணத்தை மேற்கொண்டனர்.

5 பொலிஸ் நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கடமையில் அமர்த்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையிலும் வீதியால் செல்பவர்கள் வட்டுக்கோட்டை பொலிஸாரை கேவலமாக திட்டி விட்டு, எச்சில் உமிழ்ந்து விட்டு செல்வதை அங்கு அவதானிக்க முடிந்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்