பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை: பந்துல குணவர்தன
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் அமைச்சரவைப் பேச்சாளரும், முன்னாள் போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தல்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடதக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்