பேஸ்புக் விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட 26 பேர் கைது
களுத்துறை – பாணந்துறை, மஹபெல்லன பகுதியில் பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் விருந்துபசார நிகழ்வு இடம்பெற்ற விடுதி முற்றுகையிடப்பட்டு 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் தனியார் பல்கலைக்கழகமொன்றில் பயிலும், 10 மாணவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களில் 16 பேரிடமிருந்து கஞ்சா மற்றும் ஹேஸ் ரக போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவத்தின் போது, கைதான அனைவரும் அதிகளவில் போதைப்பொருளைப் பயன்படுத்தி இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, அலுபோமுல்ல பொலிஸாரால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குறித்த முற்றுகை முன்னெடுக்கப்பட்டுள்ளது.