பெண்கள் கவிதை
💟👩🎓👩நாள் முழுவதும் சக்கரம் போல் ஓயாமல் சுழன்று வேலை செய்து வரும் பெண்கள் அனைவருமே போற்றப்பட வேண்டிய நடமாடும்
தெய்வம் தான்.
💟👩🎓👩அதிகாலை எழுவதில் எந்நாளும் வெற்றி.. அடுத்த நொடி சுறுசுறுப்பு கடைசி வரை விறுவிறுப்பு உமையாள் உமக்கே சாத்தியம்.. பெண்ணிற்கு ஆண் இணையல்ல இது சத்தியம்.
💟👩🎓👩பெண்தானே என்று தாழ்வாக நினைக்காதே.. அவள் அங்கீகரிக்காவிட்டால் உன்னை ஆண்மகன் என்று உலகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது..!
💟👩🎓👩ஏழையாக இருந்தாலும் எதையும் எதிர் கொள்வாள்.. எதிர் பார்த்து ஏங்க மாட்டாள்… பாசத்தை தைத்து பண்பை விதைத்து அன்பை நிறைத்து அகிலத்தை காத்திடும் விருட்சம் பெண்..
💟👩🎓👩யார் சொன்னது பெண் தேவதைகள் நேரில் இல்லையென்று இதோ காண்கிறேன் நான் தினமும் என் அம்மாவின் உருவத்தில்.
💟👩🎓👩கோபத்தில் முகத்தை திருப்பிக் கொண்டு சமாதானத்திற்காக ஏங்கும் குழந்தையாகிறாள் பெண்.பிடித்தவர்களிடம் மட்டும்.!
💟👩🎓👩ஆயிரம் பேர் எதிர்த்து நின்று நம்மீது பழி சொன்னாலும் தவறு நம் மீதே இருந்தாலும் நம்மை விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை போராடும் உறவுக்கு பெயர்தான் மனைவி..!
💟👩🎓👩பெண்களுக்கு வீரமான ஆண்களை விட அன்பான ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..!
💟👩🎓👩கிடைத்த ஒரே வாழ்வையும் தனக்காய் வாழா உன்னத உயிர் பெண்.
💟👩🎓👩தனக்கே வலித்தாலும் தன்னை நேசித்தவர்களுக்கு வலிக்க கூடாது என்று நினைப்பது தான் பெண்களின் குணம்.!
💟👩🎓👩பெண்களுக்கு மரியாதை கொடுங்கள் உங்கள் அம்மா பெண் என்பதால் இல்லை நீங்கள் சிறந்த ஆண் என்பதால்.!
💟👩🎓👩பெண்களின் மனதை அறியும் நூல் எந்த நூலகத்திலும் இல்லை அவளை காதலித்தவனை தவிர.!
💟👩🎓👩கடவுள் எழுதிய கவிதை பெண் ஆனால் அந்த கவிதையை தினமும் வர்ணிப்பது ஒரு ஆண்.!
💟👩🎓👩நட்பாய்,காதலாய்,வீரமாய், பக்தியாய், சாதனையாய்,சரித்திரமாய் ஆண்டாண்டு காலமாய் வீற்றிருப்பது பெண்மை
💟👩🎓👩பெண்ணாய்ப் பிறந்தது உழைத்து மடிவதற்கேவெனும் எண்ணத்துடன் வாழ்வதுதான் எங்கள்நிலையோ.!
💟👩🎓👩ஒரு பெண் திமிராக இருப்பதற்க்கு அவளின் ஒழுக்கமும் நேர்மையான அன்பான குணமே காரணம்.!
💟👩🎓👩ஒரு பெண்ணுடைய அழுகையின் உச்சம் தான் ஆணவம். அவளின் ஏமாற்றத்தின் உச்சம் தான் திமீர். துரோகத்தின் உச்சம் தான் தெனாவட்டு.
💟👩🎓👩யாரும் துரத்தாமலே ஓடுவதும் எதையும் தொலைக்காமலே தேடுவதும் தான் பெண்களின் வாழ்க்கை .
💟👩🎓👩தினம் தினம் ஆயிரம் பிரச்சனைகள் ஆயிரம் கவலைகளை மனதில் அடக்கி கொண்டு எதுவுமே நடக்காதது போல வேளியே புன்னகைத்து வாழ்பவர்கள் தான் பெண்கள்.!
💟👩🎓👩ஆண் என்ற அகங்காரம் கொள்வதற்க்கு முன்னாள் யோசி. முதலில் உன்னை ஒரு பெண் பத்து மாதம் சுமந்து பெற்றாலே நீ ஒரு ஆண் மகன்.!
💟👩🎓👩பெண்கள் சந்தோசமாக இருந்தா அவர்களை பேசுறத யாராலும் நிறுத்த முடியாது சோகமா இருந்தால் அவர்களை யாரலும் பேச வைக்க முடியாது.
💟👩🎓👩தன்னை விட தனது வாழ்க்கை துணைக்கு அறிவும் திறமையும் அதிகம் என்று தெரிந்த பின். பெண் சந்தோசம் கொள்கிறாள். ஆண் சந்தேகம் கொள்கிறான்.!
பெண்கள் கவிதை
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்