புற்றுநோய்-அறுவைச் சிகிச்சை செய்த மைக்கேல் கிளார்க்!

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான மைக்கல் கிளார்க் தனக்கு ஆறாவது முறையாக புற்று நோய்க்கான அறுவைச் சிகிச்சை செய்ததாக பதிவிட்டுள்ளார்.

44 வயதாகும் கிளார்க்கிற்கு முதல்முறையாக 2006-இல் முதல்முறையாக அவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர், 2019இல் நெற்றியிலும் 2023-இல் மார்புப் பகுதியிலும் இருந்த புற்றுநோய் செல்களை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினார்.

இந்தநிலையில் தற்போது தனது மூக்கில் இருந்ததை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.