
புயலால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு கடன் சலுகை
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் மற்றும் வணிகங்களின் விரைவான மீட்சிக்காக, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சிற்கும் வங்கி அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று புதன்கிழமை நடைபெற்றது.
இதன்போது பாதிக்கப்பட்ட அனைத்து வணிகங்களுக்கும் 3 முதல் 6 மாதங்கள் வரை கடன் தவணைகளைச் செலுத்த கால அவகாசம் வழங்க வங்கிகள் சம்மதித்துள்ளன.
அத்துடன் இந்த நிவாரணக் காலத்திற்காக எவ்வித மேலதிக கட்டணங்களோ அல்லது வட்டியோ வசூலிக்கப்பட மாட்டாது என உறுதியளித்துள்ளன,
இதற்கமைய தகுதியுடைய வணிக உரிமையாளர்கள் இந்த வசதியைப் பெற அந்தந்த வங்கி கிளைகளில் கோரிக்கை கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் மத்திய வங்கியின் பரிந்துரைக்கமைய, சலுகை அடிப்படையிலான குறைந்த வட்டி கடன்களை வழங்கவும் வங்கிகள் தயாராக உள்ளன.
பாதிக்கப்பட்ட வணிகங்கள் குறித்த தரவுகளை அமைச்சும் வங்கிகளும் பகிர்ந்து கொள்வதற்கும், வாராந்தம் இந்த வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
