புதிய டிஜிட்டல் அடையாள அட்டை
புதிய டிஜிட்டல் அடையாள அட்டையைத் தயாரிப்பதற்காக இந்திய நிறுவனங்களிடமிருந்து விலைமனு கோரப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கு 4 மாத கால அவகாசம் வழங்கப்படுமென்றும் இந்தத் திட்டத்திற்கான மானியமாக இந்தியா இலங்கைக்கு வழங்கும் தொகை 10.4 பில்லியன் ரூபாவென்றும் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.