புதிய அம்சங்கள் இன்ஸ்டாகிராம் அறிமுகம்

மெட்டாவுக்கு சொந்தமான பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமுக்கு, அண்மை காலமாகவே மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

இன்ஸ்டாகிராம் உலகின் நான்காவது பாரிய சமூக வலைத்தளமாகத் திகழ்கின்றது.

உலகம் முழுவதும் சுமார் 2 பில்லியன் பேர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில், தற்போது புதிதாக சில அம்சங்களை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்ளது.

எக்ஸ் தளத்தில் இருப்பது போல ரீல்ஸ்களை ரீபோஸ்ட் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேநேரம் பயனர்களுக்கு இடையே தொடர்புகளை மேம்படுத்தும் விதமாக இண்டரக்டிவ் மேப், பிரண்ட்ஷிப் டேப் ஆகிய வசதிகளும் கொண்டு வரப்பட்டுள்ளன.