புகையிரதத்தில் மோதி உயிரிழந்த யானையின் உடலால் துர்நாற்றம்

-யாழ் நிருபர்-

புகையிரதத்தில் மோதி உயிரிழந்த யானையின் உடலால் துர்நாற்றம் வீசுவதாகவும், அதனை முறையாக புதைக்காமை தொடர்பில் கவலை வெளியிடப்படுகிறது.

யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த புகையிரதத்தோடு மோதி தாய் யானையும் குட்டியும் கடந்த 25ம் திகதி சனிக்கிழமை பலியாகியிருந்தது.

உயிரிழந்த குறித்த யானைகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமையால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், அகாதார பாதிப்புகள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்