பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் வைத்தியசாலையில்
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் தன்னுடைய தனித்துவமான குரல் வளத்தால் உலக அளவில் பிரபலமானவர் ஆவார்.
மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி உள்ளார்.
இந்த நிலையில் பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரத்த அணுக்கள் தொடர்பான பிரச்சினைக்காக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தற்போது நலமோடு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
சிகிச்சை நிறைவடைந்த பின்னர் வீடு திரும்பவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.