பின்லாந்தில் இரு ஹெலிகாப்டர் விபத்து ஐவர் பலி

பின்லாந்தில் இரு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி தரையில் விழுந்ததில் ஹெலிகாப்டர்களில் இருந்த ஐந்து பேரும் கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை யூரா விமான நிலையத்திற்கு அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் என புலனாய்வு தலைமை ஆய்வாளர் ஜோஹன்னஸ் சிரிலா ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இரு ஹெலிகாப்டர்களில் ஒருவர் இரண்டு பேரையும் ,மற்றையவர் மூவரையும் ஏற்றிச் சென்றனர். அவர்கள் எஸ்தோனிய தலைநகர் தாலினில் இருந்து புறப்பட்டு, பிகாஜார்விக்குச் சென்று கொண்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

விமானத்தில் இருந்தவர்கள் வணிகர்கள் என்று ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.

பின்லாந்து வானில் 2 ஹெலிகாப்டர்கள் பயங்கர மோதல்
பின்லாந்து வானில் 2 ஹெலிகாப்டர்கள் பயங்கர மோதல்