பாரம்பரிய போஷாக்கு உணவுகளின் கண்காட்சி
-கிரான் நிருபர்-
கோறளைப்பற்று பிரேதேச செயலகம் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஏற்பாட்டிலும் உலக தரிசனம் வேர்ள்ட் விஷன் (world vision) லங்கா அனுசரனையின் “ஆரோக்கியமான உணவு எமது உரிமை” எனும் தொனிப்பொருளில் அருகி வரும் பாரம்பரிய போஷாக்கு உணவு கண்காட்சி கண்ணகிபுரம் லயன்ஸ் கிளப் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
அருகி வரும் பாரம்பரிய உணவு பழக்கத்தினை செயல் முறைப்படுத்தும் விதமான விளக்க உரைகள், உணவுகளை தயாரித்து காட்டல் மற்றும் பல்வேறு வகையான நூறுக்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகளை காட்சிப்படுத்தல் போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் பிரதேச பிரதேச செயலகத்திலிருந்து உணவு பழக்கம் தொடர்பாக விழிப்புணர் ஏற்படுத்தும் ஊர்வலம் இடம்பெற்றது.
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் ஜெயந்தி திருச்செல்வம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரன் , சுகாதார அலுவலக வைத்தியர் பாமினி அச்சுதன், ஏ.ரவீந்திரன் முகாமையாளர் வேர்ள்ட் விஷன் லங்கா வாகரை, வாழைச்சேனை இளைஞர் படை அணி பணிப்பாளர் , லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர். பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், வேர்ள்ட் விஷன் லங்கா பணியாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.