பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சிலர் பதவி விலகல்!
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.
இதற்கான பதவி விலகல் கடிதங்கள் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி உடவத்த ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
அத்துடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களும் பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.