பரீட்சை எழுதிய 319,284 மாணவர்களில் 51,244 மாணவர்கள் சித்தி!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், கிட்டத்தட்ட 16.05 வீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளின்படி, பெறப்பட்ட அதிகபட்ச மதிப்பெண் 188 என்று பரீட்சை ஆணையாளர் அறிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

பரீட்சை முடிவுகளின்படி, எட்டு மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்

அதன்படி, ஒரு மாணவர் 188 புள்ளிகளையும், அதே நேரத்தில் 17 பேர், 186 முதல் 187 வரையான புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பரீட்சை எழுதிய 319,284 மாணவர்களில், 51,244 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர், என தெரிவித்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்