பதுளை அருள்மிகு மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேகம்
வரலாற்று சிறப்பு மிக்க பதுளை அருள்மிகு மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேகம், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, பக்தி பூர்வமாக, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ, வேத பாராயணங்கள் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது.
நேற்று முன்தினம் பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகி, நேற்று வியாழக்கிழமை காலை 7.00 மணிமுதல் பக்தி பூர்வமாக எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 8.05 முதல் 9.11 வரையுள்ள சுப முகூர்த்த வேளையில், பதுளை நகர் அருள்மிகு மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமிக்கும், ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும், பக்தி பூர்வமாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.