பங்களாதேஷ் அணிக்கு 169 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

 

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரினுடைய சூப்பர் 4 சுற்றின் நான்காவது போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது.

டுபாயில் இடம்பெறும் குறித்த போட்டியில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை பெற்றது.

இந்தநிலையில் பங்களாதேஷ் அணிக்கு 169 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.