நுவரெலியாவில் இடம்பெற்ற மாபெரும் இரத்ததான முகாம்
-நானுஓயா நிருபர்-
நுவரெலியாவில் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் (EMPLOYEES’ TRUST FUND BOARD) கிளையின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் இடம்பெற்றது.
குறித்த இரத்ததான முகாம் நுவரெலியா பொது நூலகம் கேட்போர் கூட மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 வரை நடாத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் அரச அதிகாரிகள் இளைஞர், யுவதிகள் உட்பட பலர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர் .
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த இரத்ததான நிகழ்வில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர், தாதிய உத்தியோகத்தர்கள் வருகை தந்து இரத்தங்களை சேகரித்துக் கொண்டனர் .
இதன் போது குருதிக்கொடை வழங்கிய கொடையாளிகளுக்கு நினைவாக மதிப்புள்ள சான்றிதழ் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.