நுவரெலியாவில் அஸ்வெசும இரண்டாம் கட்டப் பதிவு – மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு

-நுவரெலியா நிருபர்–

நாடளாவிய ரீதியில் அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு தகுதியானவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு கிடைக்கப்பெறாத, தகுதியான குடும்பங்களை இனங்காணும் செயற்பாடுக்கு அமைவாக இடம்பெற்று வருகிறது .

அந்த வகையில் இன்று சம்பந்தப்பட்ட பயனாளிகள் நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு வருகைந்தந்து ஏராளமான பொதுமக்கள் நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியோரத்தில் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.