நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

-நானுஓயா நிருபர்-

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் இன்று திங்கட்கிழமை காலை 10 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நுவரெலியா மாவட்டத்தில் ஒழுங்கு படுத்தப்பட்டு 540 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன இவ் அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களுக்கும் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் மூலம் நுவரெலியா காமினி மத்திய மகா வித்தியாலயத்தில் இருந்து வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது .

குறிப்பாக நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான துஷாரி தென்னக்கோன் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒரு நகராட்சி மன்றம், இரண்டு நகர சபைகள் மற்றும் 9 பிரதேச சபைகள் ஆகும். இந்த நிறுவனங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட 80 அரசியல் கட்சிகள் மற்றும் 09 சுயேச்சைக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 2485 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இவர்களில், தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நகராட்சி மற்றும் பிராந்திய உறுப்பினர்கள் எண்ணிக்கை 300 ஆகும். இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிக்க தகுதியுடைய வாக்காளர்களின் எண்ணிக்கை 610,117 ஆகும், இதில் 18,342 பேர் அஞ்சல் வாக்காளர்களாகும்.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்காக 6352 அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இதில் போக்குவரத்துக்காக அரச மற்றும் தனியார் வாகனங்கள் அடங்கலாக 672 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றது.

எனவே நாளை காலை 7 மணிக்குத் ஆரம்பமாகி மாலை 4 மணி வரை வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு இடம்பெற உள்ளது எனவும் , அத்துடன் நீதியானதுமான சுதந்திரமானதும், தேர்தலை நடத்துவதற்கு பொதுமக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் எனவும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான துஷாரி தென்னக்கோன் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • Beta

Beta feature

  • Beta

Beta feature

  • Beta

Beta feature

  • Beta

Beta feature